CINEMA
மேடையில் ரஜினியை பற்றி ஒற்றை பேச்சில், தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் செய்யப்பட்ட மனோரமா..
நடிகை மனோரமாவை, தமிழ் சினிமாவில் ஆச்சி என்று அழைப்பதுதான் வழக்கம். அந்த கால எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நாகேஷ், சந்திரபாபு போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்தார். பின், ரஜினி, கமல் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்தார். பிறகு பாண்டியராஜ், விஜய், அஜீத், சூர்யா போன்றவர்களுக்கு பாட்டியாக நடித்தார். இப்படி மூன்று தலைமுறைகளை கண்ட மனோரமா, தமிழ், தெலுங்கு சினிமாவில் 5 ஆயிரம் படங்களுக்கு நடித்தவர்.
மனோரமாக, நாடக நடிகரை மணந்தார். அவர் சினிமாவில் இனி நடிக்க வேண்டாம் என கட்டுப்பாடு விதித்ததால், கணவரை விட்டு பிரிந்து மகன் பூபதியுடன் தனியாக வாழ்ந்தார். நிறைய படங்களில் தொடர்ந்து நடித்தார். ஜெயலலிதாவின் நெருங்கி தோழியாக, அவரது அன்புக்குரியவராக இருந்த மனோரமா, மகன் பூபதி, சசிகலா நடராஜன் செய்த கட்டாயத்தால், ஒரு கட்டத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஒரு மேடையில், ரஜினி குறித்து மிக தரக்குறைவாக விமர்சனம் செய்தார். அந்த தேர்தலின் போது கருணாநிதி, ஜி.கே மூப்பனாருக்கு ரஜினி ஆதரவாக பேசி இருந்ததால், ரஜினி குறித்து மேடையில் மனோரமாவை பேச வைத்தது மனோரமாவின் மகன் பூபதிதான். அந்த தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.
இந்நிலையில், ரஜினியை தரக்குறைவாக பேசியதால் மனோரமாவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பின்றி போனது. ஆனால், என் மகனின் வற்புறுத்தலால் அப்படி ரஜினி குறித்து பேசிவிட்டேன். நானாக அப்படி பேசவில்லை என பலரிடமும் சொல்லி மனோரமா வருத்தப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த ரஜினிகாந்த், சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த அருணாசலம் படத்தில், கதாநாயகி சவுந்தர்யாவின் பாட்டியாக நடிக்கும் வாய்ப்பை மனோரமாவுக்கு ரஜினி வழங்கினார். அதற்கு பின்பே, பழையபடி மனோரமாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.