மதுரை மீனாட்சியம்மன் கோவில் அர்ச்சகர் கேட்ட கேள்வியால் திடுக்கிட்டுப் போன ரஜினிகாந்த்? அப்படி என்ன கேட்டுருப்பாரு?

By Arun on ஏப்ரல் 19, 2024

Spread the love

தமிழ் திரையுலக ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். தொடக்கத்தில் ராகவேந்திர சுவாமிகள் மீது அதிகளவு பக்தி கொண்டிருந்தார் ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து மகா அவதார் பாபாஜியின் மீது அளவுக்கடந்த பக்தி நிரம்பியது.

அடிக்கடி இமயமலைக்குச் சென்று பாபாஜியின் குகைக்குள் உட்கார்ந்து தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். மேலும் பாபாஜி மேல் கொண்ட பக்தியின் தாக்கத்தால்தான் ரஜினிகாந்த் “பாபா” என்ற திரைப்படத்தையே தயாரித்திருந்தார்.

   

   

இவ்வாறு ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவரான ரஜினிகாந்த் ஒரு நாள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தரிசனம் பெற சென்றிருக்கிறார். அப்போது அக்கோயிலின் அர்ச்சகர் ரஜினிகாந்தின் பெயரில் அர்ச்சனை செய்வதற்காக அவரிடம் “உங்கள் நட்சத்திரம் என்ன?” என்று கேட்டிருக்கிறார்.

 

ஆனால் ரஜினிகாந்திற்கோ தனது நட்சத்திரத்தை குறித்து தெரியாதாம். என்ன சொல்வது என தயங்கி நின்றிருந்தபோது அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த நடிகை சச்சு, அர்ச்சகரிடம் “இவரோட நட்சத்திரமும் அந்த பெருமாள் நட்சத்திரமும் ஒரே நட்சத்திரம்தான். பெருமாளுடைய நட்சத்திரம் பெயரிலேயே இவருக்கு அர்ச்சனை செய்யுங்கள்” என்று கூறினாராம். அதன் பிறகுதான் ரஜினிகாந்திற்கு தன்னுடைய நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரம் என்று அவருக்கே தெரியவந்ததாம். இத்தகவலை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.