நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய நடிகராக வளர்ந்து நிற்கிறார். ஆனால், ஆரம்ப காலகட்டத்தில் அவரும் மற்ற நடிகர்களை போல போராடி, பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று, கிடைத்த படங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தவர். இளம் வயதில் இருந்த ரஜினி, நடிகைகளுடன் சேர்ந்து நடிப்பதும், அவர்களுடன் நட்பாக பழகுவது போன்ற சம்பவங்கள் அப்போது நடந்திருக்கிறது.
இதில் ஒரு நடிகையுடன், ரஜினிகாந்த் பழகுகிறார் என்ற அடிப்படையில் ஏதோ ஒரு கிசுகிசு ஒரு சினிமா பத்திரிகையில் வந்திருக்கிறது. இப்போது சமூகவலைதளங்களை போல, பரபரப்பான, டிரண்டிங் செய்திகள் என்பது சினிமா பத்திரிகைகளில் வருவதுதான். தினமும் ஷூட்டிங் ஸ்பாட்களுக்கு வரும் சினிமா நிருபர்கள், இதுபோன்ற தகவல்களை சேகரித்து வெளியிடுவர். அப்படித்தான் ஒரு பத்திரிகையாளர் ரஜினி பற்றிய கிசுகிசுவை எழுதி இருக்கிறார்.
சென்னையில் ஒரு முறை மதுபோதையில், ரஜினி காரை ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அந்த கிசுகிசு வெளியாகி சில தினங்கள் தான் ஆகியிருந்தது. அப்போது காரில் ஓட்டிச் சென்ற ரஜினி, அந்த செய்தியாளரை பார்த்து ஆத்திரப்பட்டு காரில் துரத்தியிருக்கிறார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இப்போது ரஜினிகாந்த், அந்த குடிப்பழக்கத்தையே வெறுக்கிறார். சமீபத்தில் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, இந்த குடிப்பழக்கம் மட்டும் இல்லாவிட்டால், நான் வேற ரேஞ்சுல இருந்திருப்பேன். அதனால், குடிப்பழக்கம் இருந்தால் விட்டுவிடுங்கள் என, தன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…