இந்திய சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அமிதாபச்சன். இவர் இந்தி சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கின்றார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரும் இந்தியில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருக்கின்றார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக அமிதாபச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “33 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானவேல் இயக்கத்தில் வெளிவர இருக்கும் தலைவர் 170 படத்தில் எனது வழிகாட்டியுடன் மீண்டும் பயணிக்கின்றேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கின்றது” என்று கூறியுள்ளார். மேலும் அவர் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…