Connect with us

எனக்கு ஆம்பள வாரிசு இல்ல.. உன் பையன தத்து கொடுனு பிரபல நடிகையின் கணவரிடம் கேட்ட ரஜினி..

CINEMA

எனக்கு ஆம்பள வாரிசு இல்ல.. உன் பையன தத்து கொடுனு பிரபல நடிகையின் கணவரிடம் கேட்ட ரஜினி..

சன் தொலைக்காட்சியில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மனதை கவர்ந்து தொடர் ‘மெட்டி ஒலி’. இத்தொடரில் வில்லி மாமியாராக வந்து ஒட்டுமொத்த சீரியலையும் விறுவிறுப்பாக்கியவர் சாந்தி வில்லியம்ஸ். இடையில் சீரியலில் நடிக்காமல் இருந்தார் சாந்தி வில்லியம்ஸ். தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருடைய கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற கேமரா மேன் ஆக வலம் வந்தவர். அவருடைய மரணத்திற்கு பிறகு குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் சாந்தி வில்லியம்ஸ்.  சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடேசன் நகரில் தனது குடும்பத்துடன் சாந்தி வில்லியம்ஸ் வசித்து வருகிறார்.

   


தனது 12 வயதில் இருந்தே நடிக்க தொடங்கியவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். இவர் 1979 இல் மலையாள கேமரா மேன் வில்லியம்சை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு  நான்கு பிள்ளைகள் உள்ளனர். நடிகை  சாந்தி வில்லியம்ஸ் ஒரு பேட்டியில், தன் கணவரால் ஏற்பட்ட மன சங்கடமும் ரஜினி அவர்களைப் பற்றியும் சில விஷயங்களைப் பகிர்ந்து உள்ளார்; அதாவது, இதுவரை என் கணவர் வில்லியம்ஸ் எனக்கு நல்ல ஞாபகங்களை கொடுத்துட்டு போனதில்ல, எல்லாம் மோசமான கனவு மாதிரி தான் இருக்கு.

   

ஏன் ஒரு டைம் ரஜினி சார் கூட என்னோட மூத்த மகனை அவர் கிட்ட கேட்டு இருக்காரு, எனக்கு பையனே இல்ல எனக்கு மகன் வாரி இல்லாததனால, உன் பையன தத்து எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டு வில்லியம்ஸ் கிட்ட என்னோட மூத்த மகனை கேட்டு இருக்காரு. ஆனா கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் கொடுக்க மாட்டேன், எனக்கு என் ஆம்பள பையன் முக்கியம் அப்படி சொல்லிட்டு ரஜினி சார்ட்டையே பையன கொடுக்காம வேகமாக கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டாரு. இவர் என் மேல வச்சிருக்க பாசத்தை விட பசங்க மேல வச்சிருக்க பசங்க ரொம்ப அதிகம்.

 

என் மேல துணி கூட அவருக்கு பாசம் கிடையாது, ரஜினி சார் கேட்டே கொடுக்க முடியாதுன்னு சொன்னா, இவரு எவ்வளவு அவர் பையன் மேல பாசம் வைத்திருப்பார் பாருங்க. ஆனா இவரு கடைசி சாகுற தருணத்தில் தான் வாழ்க்கையே புரிஞ்சுகிட்டாரு. அப்ப புரிஞ்சு ஒரு பிரயோஜனமும் இல்லை. என்று சாந்தி வில்லியம்ஸ் தன் வாழ்வில் நடந்த கசப்பான விஷயங்களை பற்றியும் ரஜினி சார் பற்றியும் மனம் திறந்து பேசி உள்ளார்.

author avatar
Ranjith Kumar

More in CINEMA

To Top