லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 171-வது படத்தில் நடிக்கிறார். முன்னதாக நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் படம் வசூல் சாதனை படைத்தது. அடுத்ததாக வேட்டையன் திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டார் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தலைவர் 171-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
தலைவர் 171-வது படத்தில் ரஜினிகாந்த் மாபியா டானாக இருப்பதாக கூறப்படுகிறது. தங்க கடத்தலை பின்னணியாக வைத்து லோகேஷ் அந்த படத்தை இயக்க உள்ளாராம். துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் கடத்தப்பட்டதை சுற்றியே கதை நகர்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படம் குறித்த மேலும் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.
தலைவர் 171-வது படத்திற்கு Eagle என பெயர் வைக்க ஆலோசித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் கழுகு, காக்கா கதையை கூறியதால் இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டனர். அவர் விஜயை தான் மறைமுகமாக கூறுகிறார் என ரசிகர்கள் மாறி மாறி சமூக வலைதளத்தில் மோதிக்கொண்டனர்.
அதன் பிறகு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினிகாந்த் தான் பொதுவாக தான் அந்த கதையை கூறினேன். விஜயை குறிப்பிடவில்லை. நான் பார்த்து வளர்ந்தவர் அவர் என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அப்படி இருக்க தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்திற்கு Eagle என பெயர் வைக்க ஆலோசித்து வருகின்றனர். இதனால் விஜய் ரஜினிகாந்த் ரசிகர்கள் மீண்டும் மோதிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.