இதைவிட வேறென்ன வேணும்.. லால் சலாம் படத்தின் ரிலீஸை முன்னிட்டு மகள் ஐஸ்வர்யாவுக்கு தந்தை ரஜினி கொடுத்த பரிசு…

By Ranjith Kumar

Updated on:

தமிழ் சினிமாவை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் ரஜினி அவர்கள், ரஜினி அவர்களை தமிழ் சினிமா துறையின் பேஸ்மெண்ட் என்று கூறலாம், ஆனால் அவர் பாக்காத ஆழமும் கிடையாது அவர் பார்க்காத மேல் மட்டுமே கிடையாது, அவர் தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்றே கூறலாம், பலபேர் அவரை எங்கள் வீட்டுப்பிள்ளை என்று கூறுவார்கள் கடந்த 42 வருடங்களாக தமிழ் சினிமாவில் மக்கள் மனதை கொள்ளை பிரியம் கொண்டிருக்கும் ஒரு பேரழகன் என்றால் அது ரஜினி அவர்களுக்கு கொடுத்தாகணும்.

   

தமிழ் மக்கள் இவருக்கு சும்மா சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து விடவில்லை இவர் பால் போன்ற அந்த வெள்ளை மனசையும் இவர் கனிவான பேச்சையும் பார்த்து மயங்கி அவரின் அன்பிற்கு அடிமையாகி இம்மக்கள் அவரை தலையில் தூக்கி வைத்து இருக்கிறார்கள், இவர் 70களில் சாதாரண நடிகனாக உருவாகி 80களில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து தக்க வைத்த, அந்த இடத்தை இன்னும் கொண்டு வந்து இப்போ வரை அவர் மக்களை மகிழ்விப்பதற்காகவே படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இன்று தன் மகளின் இயக்கத்தில் உருவான லால் சலாம் படம் உலகெங்கிலும் அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. தன் மகளின் இயக்கத்தில் ரஜினி நடித்திருப்பது அவருக்கே ஒரு பெருமையான தருணம் தான்.எத்தனையோ பல முன்னனி இயக்குனர்களுடன் பணிபுரிந்த ரஜினி இந்த படத்தில் மகளுடன் இணைந்திருப்பது ரஜினிக்கு ஒரு ஸ்பெஷலான விஷயம்தான். இந்த நிலையில் லால் சலாம் படம் ரிலீஸ் ஆவதை ஒட்டி தன் மகளுக்கு ரஜினி மிகவும் உருக்கமான முறையில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அதை பார்க்கும் போது தன் மகள் மீது எந்தளவு ரஜினி நம்பிக்கையும் பாசமும் வைத்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது. அந்த பதிவில் ‘என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.எல்லா மகளும் அவரவர் அப்பாவுக்கு ஒரு தாய் போல்தான். அதே மாதிரியான ஒரு மன நிலையில்தான் ரஜினியும் தன் மகளை தாய் என குறிப்பிட்டு தன் வாழ்த்துக்களை குறிப்பிட்டிருக்கிறார். இது ஐஸ்வர்யாவுக்கு கிடைத்து ஒரு மிகப்பெரிய பாக்கியமாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar