விஜயகாந்தின் அந்த படத்தை முதல் ஆளாகப் பார்த்ததே ரஜினி சார்தான்… அவர் சொன்ன வார்த்தை இதுதான் – தயாரிப்பாளர் தாணு பகிர்ந்த தகவல்!

By vinoth on புரட்டாதி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இயங்கும் தனித்தன்மை வாய்ந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ் தாணு. 1980 களில் விநியோகஸ்தராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்த அவர் அதன் பின்னர் மெல்ல மெல்ல தயாரிப்பாளராக வளர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை எடுத்தார்.

தனது படங்களை சிறப்பாக எடுத்து அதற்கு வித்தியாசமான பிரம்மாண்டமான விளம்பரத்தை செய்து படத்தை மக்களைக் கொண்டு சென்று வெற்றி பெறுபவர் தாணு. தான் தயாரித்த கபாலி படத்தின் விளம்பரத்துக்காக ஏர் இந்தியா விமானத்தில் அதன் போஸ்டரை இடம்பெறவைத்தார். அந்தளவுக்கு வித்தியாசமாக யோசிக்கக் கூடியவர்.

   

இந்நிலையில் விஜயகாந்தோடு நெருக்கமான நட்பில் இருந்த தாணு விஜயகாந்தை வைத்து வருசத்துக்கு ஒருபடம் பண்ணுவோம் என்ற ஒப்பந்தத்தின் பேரில் அவரோடு கூட்டணி அமைத்துள்ளனர். அப்படி உருவான படங்களில் ஒன்றுதான் கூலிக்காரன். இந்த படம்தான் விஜயகாந்தை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியதில் ஒரு முக்கியப் படம்.

   

அப்போது கமர்ஷியல் இயக்குனர் என அறியப்பட்ட ராஜசேகர் இயக்க, டி ராஜேந்தர் இசையமைப்பில் ஆக்‌ஷன் படமாக உருவான இந்த படம் முடிந்ததும் முதலில் ரஜினிகாந்துக்குதான் போட்டுக் காட்டினாராம் தாணு. அதைப் பார்த்த ரஜினிகாந்த், “படம் சிறப்பாக வந்திருக்கிறது. நல்லா விளம்பரம் பண்ணுங்க.. வெற்றி பெறும்” என சொல்லி சென்றாரம்.

 

அவர் சொன்னபடியே அந்த படத்துக்கு மிகச்சிறப்பான விளம்பரத்தைக் கொடுத்து ரிலிஸ் செய்தார் தாணு. படமும் சூப்பர் ஹிட். ரஜினியின் அந்த வார்த்தை பலித்ததாகவே நினைத்தாராம் தாணு. இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து விஜயகாந்த் தாணு கூட்டணியில் பல படங்கள் வந்தன. கடைசியாக இருவரும் புதுபாடகன் படத்தில் இணைந்து பணியாற்றினர். அந்த படம் தோல்வி அடையவே இருவரும் அதன் பின்னர் இணைந்து படத்தில் பணியாற்றவில்லை.