ரஜினிய வச்சு படம் பண்ணத் தயங்கிய தயாரிப்பாளர்கள்… ஏன்னா அவர் சொன்ன அந்த கதை அதுமாதிரி – துணிந்து இறங்கிய பாலச்சந்தர்!

By vinoth on ஆவணி 20, 2024

Spread the love

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சீக்கிரமே உயிரிழக்கப் போகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ரஜினியை சூப்பர் வில்லன் ஆக்கியது பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு திரைப்படம். அதன் பிறகு ரஜினி தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகர் ஆனார்.

   

படத்தின் கதாநாயகர்களுக்கு இணையாக அவருக்கும் கைதட்டல், விசில்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்த நேரத்தில் பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார் ரஜினி. அந்த படம் வெற்றி பெற்று அவரை நிரந்தரக் கதாநாயகனாக்கி விட்டது. ஆனால் அதன் பிறகு ரஜினியை ஒரு வெற்றிகரமான கதாநாயகன் ஆக்கியது பஞ்சு அருணாச்சலம்தான். அவர்தான் பிரியா என்ற படத்தில் ரஜினியைக் கதாநாயகன் ஆக்கி சிங்கப்பூர் எல்லாம் சென்று படமாக்கி வந்தார்.

   

அதன் பிறகு ரஜினி தமிழ் சினிமாவில் எம் ஜி ஆரின் இடத்தை நிரப்பினார். அவர் படம் நாளுக்கு நாள் பிஸ்னஸ் அதிகமாகிக் கொண்டே சென்றது. அப்போது ரஜினிக்கு திடீரென்று ஒரு ஆசை வந்தது. அது ராகவேந்திரர் வேடத்தில் தான் நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு அதனால் நஷ்டம் வந்தால் தான் இன்னொரு படம் நடித்துத் தருகிறேன் என்ற ஆஃபரையும் கொடுத்துள்ளார். ஆனால் யாருமே அதற்கு முன்வரவில்லை.

 

அப்போது ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற பாலச்சந்தரிடம், என்னை வைத்து ராகவேந்திரர் படத்தை எடுத்துத் தாருங்கள் எனக் கேட்டுள்ளார். ரஜினிக்காக அந்த படத்தைத் தயாரித்த பாலச்சந்தர், அதில் எந்த விதமான கமர்ஷியல் காட்சிகளும் இருக்கக் கூடாது என்று சொல்லிவிடடராம். படத்தை எஸ் பி முத்துராமன் இயக்க எதிர்பார்த்தது போலவே படம் தோல்விப் படமாக அமைந்தது. ஆனால் அந்த படத்துக்கு தமிழக அரசின் வரிவிலக்குக் கிடைத்ததால் பெரிய அளவில் நஷ்டம் இல்லாமல் தப்பித்துள்ளது.