Categories: சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக களத்தில் இறங்கும் நடிகர் சூர்யா…!

Spread the love

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46வது படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தை சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ழகரம் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் நஸ்ரியா நடிக்கிறார். சிங்கம் படத்துக்கு பிறகு இந்த படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. சூர்யா 47 படம் வருகிற 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வருகிற 2027ம் ஆண்டு பொங்கலுக்கு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 123 படமும் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரஜினி நடித்த 173வது படமும் சூர்யா நடித்த 47வது படமும் களத்தில் மோதுகின்றன.

Elango

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago