ரஜினியுடன் மோதும் பிரபல நடிகர்.. போன தடவை மிஸ் ஆயிடுச்சு.. ஆனா இப்போ..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

By admin on ஐப்பசி 2, 2023

Spread the love

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினார். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் நடிக்கின்றனர். முக்கியமாக கௌரவ வேடத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்துள்ளார்.

   

மொய்தீன் பாய் என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக தகவல்கள் வெளியானது. லால் சலாம் படப்பிடிப்பு திருவண்ணாமலை, சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லால் சலாம் படம் திரையரங்குகளில் வழியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

 

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அயலான் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே ஜெயிலர் படமும், மாவீரன் படமும் ஒரே தேதியில் ரிலீசாக இருந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரஜினி மேல் இருக்கும் மரியாதையை மனதில் வைத்துக்கொண்டு மாவீரன் படத்தை முன்னதாக ரிலீஸ் செய்தார். அப்படி இருக்க லால் சலாம் படமும், அயலான் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.