பிரபல இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த வேலைகளில் பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற சென்னை ஐபிஎல் போட்டியில் கமலும், இயக்குனர் சங்கரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்தியன் 2 ப்ரோமோஷனுக்காக பங்கேற்றனர்.
வருகிற ஜூலை மாதம் 12ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் ரஜினிகாந்த் உள்பட யாருமே இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள போவதில்லையாம்.
இதுகுறித்து ரஜினியிடம் கேட்டபோது இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நேரு அரங்கம் முழுவதும் கமல் ரசிகர்கள் தான் இருப்பார்கள். அதில் யாராவது ஒருவர் ஏதாவது கமெண்ட் செய்து விட்டால் எனது நண்பர் கமலுக்கும், எனக்கும் சங்கடமாக இருக்கும். இதனால் நல்லபடியாக நிகழ்ச்சியை நடத்துங்கள் நான் வரவில்லை என ரஜினி கூறிவிட்டாராம்.