“அரசியல் இல்லை… இனி சினிமாவும் இல்லை?”…. ரசிகர்களை கதறவிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திடீர் முடிவு… தமிழ் சினிமாவிற்கு அடுத்தடுத்து விழும் பேரிடி…!

By Nanthini on ஆடி 11, 2026

Spread the love

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்து, 75 வயதிலும் இளமை மாறாமல் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, தற்போது இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் ரஜினி ஒரு மாஸான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது அவரது 173 ஆவது திரைப்படமாகும்.

இப்படத்தை அடுத்து, மீண்டும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து தனது 174 ஆவது படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த மெகா கூட்டணி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதற்கு அடுத்தபடியாக உருவாகும் ‘தலைவர் 175’ திரைப்படத்துடன் ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் தற்போதைய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வரும் முடிவில் இருந்து பின்வாங்கிய ரஜினி, தற்போது சினிமாவுக்கும் விடைபெற திட்டமிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தனது அரசியல் வருகைக்காக சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது தமிழ் சினிமாவிற்கு ஏற்கனவே ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. அவரைத் தொடர்ந்து, இந்திய திரையுலகின் அடையாளமாக திகழும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தனது 175 ஆவது படத்தோடு திரையுலகை விட்டு விலகப் போகிறார் என்ற தகவல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் பெரும் வருத்தத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.