இந்தியாவில் பிரம்மாண்ட சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம்.. பட குழுவினரை அழைத்து பாராட்டிய தலைவர்..!!

By Priya Ram

Published on:

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது.

   

இந்த படத்தை இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ளார். இதில் ஸ்ரீநாத் பாலி, சௌபின் சாகிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் என ஏராளமான ரசிகர்களை மஞ்சுமெல் திரைப்படம் வெகுவாக கவர்ந்தது.

மேலும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உலகம் முழுவதும் மஞ்சுமெல் படம் சாதனை படைத்தது. இந்நிலையில் தமிழ் சினிமா பிரபலங்களும் மஞ்சுமெல் பாய்ஸ் பட குழுவினரை அழைத்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட திரை உலக பிரபலங்கள் பட குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர்.

அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மஞ்சுமெல் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram