Categories: சினிமா

எத்தனையோ ஹிட் கொடுத்த பஞ்சு அருணாச்சலம் … ஆனா ஒரு ப்ளாப் எல்லாத்தையும் காலி பண்ணிடுச்சு.. அதன் பின்னர் கண்டுகொள்ளாத ரஜினி!

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ரஜினிகாந்த் பாலச்சந்தரால் அறிமுகமான போது வில்லன் நடிகராகவே பல படங்களில் நடிக்கவைக்கப்பட்டார். அவரை கதாநாயகன் ஆக்கியது கலைஞானம் அவர்கள்தான். பைரவி படத்தில் அவர ஹீரோவாக்கினார். அதன் பின்னர் முள்ளும் மலரும் வந்து அவரை திறமையான நடிகராக அடையாளம் காட்டியது.

அதன் பின்னர் முரட்டுக் காளை திரைப்படம் வெளியாகி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்தார. அவரை கமர்ஷியல் ஹீரோவாக்கியது எஸ் பி முத்துராமனும், ராஜசேகரும்தான். இவர்கள் இருவரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்த ரஜினி ஹிட் படங்களாகக் கொடுத்தார். அந்த படங்களுக்கு எல்லாம் கதை எழுதிக் கொடுத்தவர் கதாசிரியரும் இயக்குனருமான பஞ்சு அருணாசலம்தான்.

தமிழ் சினிமாவில் பஞ்சு அருணாசலம் அப்போது பிஸியான கதாசிரியராக வலம் வந்தார். அவர் கதை எழ்தி, கதை விவாதத்தில் கலந்துகொண்ட படம் என்றாலே அது கண்டிப்பாக ஹிட்தான் என்றொரு நம்பிக்கை இருந்தது. அதற்கேற்றார் போல ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுக்கும் அவர் வரிசையாக எழுதிக் கொடுத்தார்.

இப்படி 1992 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் பஞ்சு அருணாசலம் கதையில் உருவான படம்தான் பாண்டியன். இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது. ஆனால் மோசமான கதை, திரைக்கதை காரணமாக படு அட்டர் ப்ளாப் ஆனது. இந்த படத்தின் தோல்வியால் அதன் பிறகு ரஜினி, பஞ்சு அருணாசலத்தோடு மீண்டும் இணையவே இல்லை. அதுமட்டுமில்லாமல் ரஜினி எஸ் பி முத்துராமன் கூட்டணியில் வந்த கடைசிப் படமும் பாண்டியன்தான். அதன் பின்னர் ரஜினி அடுத்த கட்ட இயக்குனர்களோடு பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.

vinoth

Recent Posts

“கண்ணை மூடு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்”… காதலியின் பேச்சை நம்பிய இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. பெங்களூரை நடுங்க வைத்த சம்பவம்…!

பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 minute ago

வாக்காளர்களைத் தொந்தரவு செய்தா தலைகீழாக கட்டித் தொங்கவிடுவோம்… அமித் ஷாவின் அதிரடி ‘வார்னிங்..!!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…

2 minutes ago

உலக நாடுகள் திக் திக்..! இன்று முடியப்போகும் ஒப்பந்தம்.. போருக்கான கவுண்ட்டவுன் ஸ்டார்ட்! அடுத்து நடக்கப்போவது என்ன..?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு வாரங்களாக அமலில் இருந்த தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…

4 minutes ago

“வரட்டா பாஸ்” கண்ணுல விரல விட்டு ஆட்டுன ஈரான்.. மிரண்டு போன அமெரிக்கா.. ‘சில்லி சிட்டி’ கப்பல் செய்த தரமான சம்பவம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்க கடற்படை கடுமையான…

9 minutes ago

“குண்டுகள் வெடிக்கும்!” – அதிரடியாக அறிவித்த டிரம்ப்… அமெரிக்கா – ஈரான் இடையே இனி பேச்சுவார்த்தை இல்லை?… உலகமே உற்றுநோக்கும் அந்த ஒரு சம்பவம்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில்,…

12 minutes ago

அதிர்ச்சி..! ‘தாய் கிழவி’ பட நடிகைக்குக் கத்திக் குத்து… ஒருதலைக் காதலனின் வெறிச்செயல்..!!

'தாய் கிழவி' திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ரேச்சல் ரெபெக்கா, தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான…

14 minutes ago