Connect with us

எத்தனையோ ஹிட் கொடுத்த பஞ்சு அருணாச்சலம் … ஆனா ஒரு ப்ளாப் எல்லாத்தையும் காலி பண்ணிடுச்சு.. அதன் பின்னர் கண்டுகொள்ளாத ரஜினி!

CINEMA

எத்தனையோ ஹிட் கொடுத்த பஞ்சு அருணாச்சலம் … ஆனா ஒரு ப்ளாப் எல்லாத்தையும் காலி பண்ணிடுச்சு.. அதன் பின்னர் கண்டுகொள்ளாத ரஜினி!

 

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ரஜினிகாந்த் பாலச்சந்தரால் அறிமுகமான போது வில்லன் நடிகராகவே பல படங்களில் நடிக்கவைக்கப்பட்டார். அவரை கதாநாயகன் ஆக்கியது கலைஞானம் அவர்கள்தான். பைரவி படத்தில் அவர ஹீரோவாக்கினார். அதன் பின்னர் முள்ளும் மலரும் வந்து அவரை திறமையான நடிகராக அடையாளம் காட்டியது.

   

அதன் பின்னர் முரட்டுக் காளை திரைப்படம் வெளியாகி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்தார. அவரை கமர்ஷியல் ஹீரோவாக்கியது எஸ் பி முத்துராமனும், ராஜசேகரும்தான். இவர்கள் இருவரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்த ரஜினி ஹிட் படங்களாகக் கொடுத்தார். அந்த படங்களுக்கு எல்லாம் கதை எழுதிக் கொடுத்தவர் கதாசிரியரும் இயக்குனருமான பஞ்சு அருணாசலம்தான்.

தமிழ் சினிமாவில் பஞ்சு அருணாசலம் அப்போது பிஸியான கதாசிரியராக வலம் வந்தார். அவர் கதை எழ்தி, கதை விவாதத்தில் கலந்துகொண்ட படம் என்றாலே அது கண்டிப்பாக ஹிட்தான் என்றொரு நம்பிக்கை இருந்தது. அதற்கேற்றார் போல ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுக்கும் அவர் வரிசையாக எழுதிக் கொடுத்தார்.

இப்படி 1992 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் பஞ்சு அருணாசலம் கதையில் உருவான படம்தான் பாண்டியன். இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது. ஆனால் மோசமான கதை, திரைக்கதை காரணமாக படு அட்டர் ப்ளாப் ஆனது. இந்த படத்தின் தோல்வியால் அதன் பிறகு ரஜினி, பஞ்சு அருணாசலத்தோடு மீண்டும் இணையவே இல்லை. அதுமட்டுமில்லாமல் ரஜினி எஸ் பி முத்துராமன் கூட்டணியில் வந்த கடைசிப் படமும் பாண்டியன்தான். அதன் பின்னர் ரஜினி அடுத்த கட்ட இயக்குனர்களோடு பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.

Continue Reading
To Top