தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தொலைத்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நிலையில் அடுத்த பட இயக்குனர் குறித்த ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பொதுவாகவே ரஜினிக்கு வருடத்திற்கு ஒரு படம் நடிப்பது தான் வழக்கம். ஆனால் கடந்த வருடம் அவருடைய நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அந்த படம் பக்கா கமர்சியல் ஹிட் ஆக மாறிவிட்டது. இதனால் ரஜினியின் மிகவும் சுறுசுறுப்பாக மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கி விட்டார்.
இதனால் இந்த வருடத்தில் மட்டுமே ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு மற்றொரு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள தொடங்கியுள்ளார். அதன்படி வருகின்ற அக்டோபர் 10 ஆம் தேதி ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜின் மற்ற கதைகளை போல இல்லாமல் இந்த திரைப்படம் வித்தியாசமான தங்க கடத்தலை மையமாக கொண்ட உருவாக்கப்பட உள்ளது.
இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ் மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் இருந்த போலீஸ் வேடத்தில் முழு நீள கதையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ள நிலையில் இப்படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினி பிரபல மலையாள இயக்குனர் ஒருவருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளாராம். நடிகர் மற்றும் இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் கடந்த வருடம் மலையாளத்தில் ஹிட் படைப்பாக உருவான 2018 திரைப்படத்தை இயக்கியவர். இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.