Connect with us

ஜனகராஜின் இந்த காமெடிய போயா தூக்குனீங்க?.. ரிலீஸுக்கு பின் தியேட்டர் தியேட்டரா போய் சேக்க சொன்ன ரஜினி!

CINEMA

ஜனகராஜின் இந்த காமெடிய போயா தூக்குனீங்க?.. ரிலீஸுக்கு பின் தியேட்டர் தியேட்டரா போய் சேக்க சொன்ன ரஜினி!

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் காமெடி நடிகராக பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். 1978ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த  ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ஜனகராஜ் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு கிடாரிஸ்ட்டும் ஆவார். தமிழ் சினிமாவில அதிகளவில் உலக சினிமா படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட நடிகர்களில் ஒருவர். ஜனகராஜுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர்.

   

அவரோடு ஜனகராஜ் இணைந்து நடித்த நாயகன், அபூர்வ சகோதரர்கள் மற்றும் குணா போன்ற படங்கள்தான் அவரின் கேரியரில் அவர் நடித்த சிறப்பான படங்கள் என சொல்லலாம்.  அதிலும் குறிப்பாக  அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் நகைச்சுவையின் உச்சமாக அமைந்தது. அந்த படத்தில் தப்பு தப்பாக அவர் துப்பறிய அதை சிலாகித்து ஆர் எஸ் சிவாஜி “தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க” என ஐஸ் வைப்பார்.

எப்படி கமல் படத்தில் தெய்வமே வசனம் பிரபலம் ஆனதோ அதுபோல ரஜினியின் படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற ‘என் தங்கச்சியே நாய் கடிச்சுச்சுப்பா” என்ற வசனம் பிரபலம் ஆனது. இந்த காட்சியை எடுக்கும்போதே ஜனகராஜின் நடிப்பைப் பார்த்து ரஜினி விழுந்து விழுந்து சிரித்தாராம். அதனால் படம் ரிலீஸாகும் போது அந்த காட்சிக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என ஜனகராஜிடம் சொல்லியுள்ளார்.

ஆனால் படத்தை எடிட் செய்யும் நீளம் காரணமாக அந்தக் காட்சியை நீக்கியுள்ளார்கள். அதைப் பார்த்து அதிர்ச்சியான ரஜினி “அந்த காட்சியை ஏன் நீக்கினீர்கள். அது கண்டிப்பாக ஹிட்டாகும். அதைப் படத்தோடு இணையுங்கள் என சொல்லியுள்ளார். அதை கேட்ட பின்னர் படக்குழு தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் படம் ஓடியதோ அங்கெல்லாம் அந்தக் காட்சியின் பிலிமைக் கொண்டு சென்று இணைத்துள்ளார்கள். அதன் பிறகு அந்த காட்சி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று இன்றளவும் நினைவுகூறப்படும் காட்சியாக அமைந்துள்ளது.

Continue Reading
To Top