#image_title
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் தற்பொழுதும் இவர் சூப்பர் ஸ்டார் தான் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. இதைத்தொடர்ந்து தனது மகளின் இயக்கத்தில் லால் ஸலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ‘தலைவர் 170’, ‘தலைவர் 171’, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படங்கள் கைவசம் உள்ள நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் சஜித் நடியாத்வாலா தயாரிப்பில் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் மருத்துவமனை கட்டி வரும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அதாவது, ஓம்.எம்.ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கர் நிலத்தினை நடிகர் ரஜினிகாந்த் வாங்கி இருக்கிறார். திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு இதற்கான பத்திரப்பதிவு நடந்திருக்கிறது. இந்த 12 ஏக்கரில் ரஜினி அவர்கள் மருத்துவமனை கட்ட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட உள்ளதாகவும், வசதி படைத்தவர்களுக்கு காசு வாங்கப்படும் என்றும் கூறப்படுகிறது . இதுகுறித்து கூடிய விரைவில் ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கூறி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…