#image_title
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜனவரி 2023ல் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இவர்களது திருமணம் ஜூலை 12ம் தேதி மும்பையில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இவர்களது திருமண கொண்டாட்டங்கள் தற்பொழுது தொடங்கிவிட்டது. குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இருக்கும் அம்பானி பண்ணை வீட்டில் ‘லகன் லக்வான்’ என்ற விழா நடைபெற்று முடிந்தது.
மார்ச் 1 முதல் 3 வரை நடைபெறும் திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் திருமண விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆனந்த்-ராதிகா திருமணத்தில் பாட்டுப் பாட அமெரிக்காவில் இருந்து பிரபல பாடகியான ரிஹானாவை ஜாம்நகருக்கு வரவழைத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் ரிஹானா பாட்டு பாடப் போவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் ரிஹானாவை இந்தியாவுக்கு அழைத்து வந்து பாட்டு பாட அவருக்கு ரூ. 74 கோடி கொடுத்திருக்கிறாராம் முகேஷ் அம்பானி. இந்நிலையில் இந்தியா வந்திறங்கிய பாடகி ரிஹானாவிடம் ரசிகர்கள் செல்பீ கேட்க, அவர் மகிழ்ச்சியோடு அனைவரையும் கூப்பிட்டு செல்பீ எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதை பார்த்த ரசிகர்கள் , ‘ ரசிகர்களை பார்த்தாலே தெறித்து ஓடும் இந்திய பிரபலங்களே இதை கொஞ்சம் பாருங்க’ என கூறி ட்ரோல் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…