ரஜினி முதல் முதலாக இரட்டை வேடத்தில் நடித்த படம் எது தெரியுமா?… அந்த படத்துக்குப் பின்னாடி இப்படி ஒரு சிறப்பு இருக்கா?

By vinoth on ஆவணி 3, 2024

Spread the love

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சீக்கிரமே உயிரிழக்கப் போகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ரஜினியை சூப்பர் வில்லன் ஆக்கியது பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு திரைப்படம். அதன் பிறகு ரஜினி தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகர் ஆனார்.

   

படத்தின் கதாநாயகர்களுக்கு இணையாக அவருக்கும் கைதட்டல், விசில்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்த நேரத்தில் பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார் ரஜினி. அந்த படம் வெற்றி பெற்று அவரை நிரந்தரக் கதாநாயகனாக்கி விட்டது. அந்த படத்தைத் தயாரித்தது கதாசிரியர் கலைஞானம். அவருக்கு சமீபத்தில் ரஜினி ஒரு வீடு வாங்கிக் கொடுத்து நன்றிக் கடனை திருப்பி செய்தார்.

   

அதன் பின்னர் ரஜினி தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் ரசிகர்கள் ரஜினியின் வில்லனிச நடிப்பை எதிர்பார்த்தார்கள். அப்போதுதான் ரஜினி பில்லா படத்தில் நடித்தார். அந்த படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். ரஜினி முதன் முதலாக நடித்த இரட்டை வேடப் படமாகும். இந்த படத்தில் ஒரு ரஜினி வில்லன், இன்னொரு ரஜினி நல்லவர். அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த நிலையில் தன்னுடைய ஹீரோ இமேஜையும் விட்டுக் கொடுக்காமல் இந்த படம் உருவானது.

 

இந்த படம் அதற்கு சில வருடங்களுக்கு முன்னர் வெளியான அமிதாப் பச்சனின் டான் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் ரஜினியின் முதல் 200 நாள் ஓடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.