நடிகர் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து வருகிற ஏப்ரல் மாதம் தலைவர் 173 என்ற படத்தின் ஷூட்டிங்கில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்க உள்ளார்.
இதற்கிடையே இயக்குனர் சுந்தர் சி நடிகர் விஷால் நடிக்கும் புருஷன் என்ற படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் பிரமோ டிரெய்லர் குறும்படம் போல வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புருஷன் படம் ஷூட்டிங் இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆகும் போது அதே நாளில் புருஷன் படத்தையும் ரிலீஸ் செய்ய இயக்குனர் சுந்தர் சி திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
