தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற மாபெரும் கட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் இணைந்துள்ளதால் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முனைப்பு காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா? என சமீபகாலமாகவே யூகங்கள் எழுந்து வருகின்றன.
மேலும் பாஜக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம் என தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், தவெக விரும்பினால் அவர்களுடன் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசுவார் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
