மாட்டு சாணத்தில் இருந்து மின்சாரம்…. மாத்திற்கு ரூ. 2.5 லட்சம் வருவாய் ஈட்டும் ராஜஸ்தான் இளைஞர்…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தை விரும்பும் இளைஞர்கள் மிகவும் குறைவு. இளைஞர்கள் அனைவரும் விவசாயத்தை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டால் வரும் சந்ததியினர் உணவு பஞ்சம் இல்லாமல் சத்தான உணவுகளை உண்ண முடியும். தென்னிந்தியாவை காட்டிலும் வடநாட்டில் இளைஞர்கள் விவசாயத்தை புதுவித அணுகுமுறையை கொண்டு அதை மேம்படுத்தி சிறப்பாக செய்து வருகின்றனர். அப்படி மாட்டினைக் கொண்டு பால் வியாபாரம் மட்டுமல்லாது மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து சாதித்திருக்கிறார் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் அவரைப் பற்றி இனி காண்போம்.

ராஜஸ்தானை பூர்வீமாகக் கொண்ட அர் பிரீத் சிங் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து பின்னர் பி டெக் படித்து முடித்தார். பிரபலமான பால் நிறுவனங்களான நெஸ்ட்லே மற்றும் அமுல் நிறுவனங்களில் பணியாற்றி பால் ஆட்டோமேஷன் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார்.

ர் பிரீத் சிங் குடும்பம் itcக்காக கோதுமை மற்றும் அரிசியை 20 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறது. அதனால் விவசாயம் மற்றும் மாடு சார்ந்தவைகளில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அப்படி 2015 ஆம் ஆண்டு கௌ ஆர்கானிக் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

50 ஏக்கர் நிலத்தில் தொடங்கப்பட்ட கௌ ஆர்கானிக்ஸ் மதிப்பு கூட்டப்பட்ட பயிர்கள் விவசாயிகளின் விலை பொருட்களை நியாயமாக விற்க ஊடகத்தை நாடி விளம்பரம் செய்தார். பயிர்கள் கூடவே மாட்டுப் பண்ணை வைத்து கௌ ஆர்கானிக் என்ற பெயரில் சில்லரை விற்பனையை செய்வதற்கு கவனம் செலுத்தினர். அமர் பிரீத் சிங் கொரோனா காலகட்டம் வந்தபோது மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது இவரது நிறுவனம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. கௌ ஆர்கனிக்ஸ் கீழ் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

அதற்கு அடுத்த கட்டமாக அமர் ப்ரீத் சிங் மாட்டு சாணத்தை வைத்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்தார். அப்படி அமர் ப்ரீத் சிங் மற்றும் அவரது குழுவினர் மீத்தேன் மூலம் செயல்படும் மின்சார ஜெனரேட்டரை உருவாக்கி இருக்கின்றனர். இந்த ஜெனரேட்டரை அவர்கள் பண்ணையில் பயன்படுத்துவதற்கும் பிற வணிக செயல்முறைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். இந்த மாட்டு சாணத்தால் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தினால் தங்களது பண்ணையில் இருந்து வரும் மின்சார கட்டணத்தில் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை சேமிக்க முடிகிறது என்று கூறி இருக்கிறார் அமர் ப்ரீத் சிங்.

10 பேர் கொண்ட குழுவில் ஆரம்பித்த கௌ ஆர்கனிக்ஸ் தற்போது 60 முதல் 70 பேர் வரை கொண்ட பங்குதாரர்களையும் விவசாயிகளையும் கொண்ட முழு அளவு வணிகமாக மாறி இருக்கிறது கௌ ஆர்கானிக்ஸ். தினமும் சுமார் 4500 பேருக்கு சேவை செய்கிறது. இவரது சிறந்த விற்பனை கிர் பசு நெய் ஆகும். இது மட்டுமல்லாமல் இவர்களின் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முறையான திட்டமிடல், விடாமுயற்சி மற்றும் செயல்பாடு இருந்தால் யாரும் ஜெயிக்கலாம் என்பதற்கு உதாரணமாக அமர் ப்ரீத் சிங் இருக்கிறார்.

admin

Recent Posts

அட கடவுளே… கையில மருந்து வாங்கக்கூட வழியில்லையே சாமி… கண்முன்னே வலிப்பில் துடிக்கும் 5 வயதுச் சிறுவன்… நெஞ்சிலடித்துக் கதறும் தாய்…!

ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் வேதனையை விடவா பெரிய துயரம் இருந்துவிட முடியும்? விளையாடும் வயதில் கைகளில் பொம்மைகளை ஏந்தி…

2 minutes ago

அட கொடுமையே… சுதந்திர தின நாளில் இப்படியா?… புர்கா அணிந்து மாணவிகள் செய்த காரியம்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்… உ.பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ‘நாலெட்ஜ் பீம் அகாடமி’ பள்ளியில், சுதந்திர தின விழாவின் போது புர்கா மற்றும்…

19 minutes ago

அறிவாலயத்துக்குப் பறந்த ரகசிய புகார்…. தவெக-வுக்கு முட்டுக் கொடுக்கும் திமுக ‘இனிஷியல் லு’ அமைச்சர்?…. சட்டமன்றத்தில் அரங்கேறும் திடீர் திருப்பம்…..!

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக…

35 minutes ago

“தம்பி பக்கத்துல வா”…. ஓடும் பைக்கில் தொடையில் கை வைத்து Rapido டிரைவர் செய்த அத்துமீறல்…. வீடியோவை வெளியிட்ட 17 வயது சிறுவன்…..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், ராபிடோ பைக் டாக்ஸியில் பயணித்தபோது, அந்த ஓட்டுநர் அவரிடம் பாலியல் ரீதியாக…

44 minutes ago

நள்ளிரவில் அகோரி சடங்கு….. ஆடையின்றி  நிர்வாணமாக 15 வயது சிறுமி…. அடுத்து நடந்த பதறவைக்கும் சம்பவம்…. அம்பலமான திடுக்கிடும் உண்மை….!

மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டம் உத்கிர் பகுதியில், மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கையின் பெயரில் 15 வயது சிறுமிக்கு இழைக்கப்படவிருந்த பயங்கரம் நல்வேளையாகத்…

56 minutes ago

முதல்வர் உள்ளே நுழைந்தால் எம்.எல்.ஏ-க்கள் கண்டிப்பாக எழ வேண்டுமா?… தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி கூறுவது இதுதான்….

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மற்றும் மரியாதை நிமித்தமான பழக்கவழக்கங்கள் குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுவது இயல்பான ஒன்று. சமீபத்தில் தமிழகச்…

1 மணத்தியாலம் ago