பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம், வெளியான டைட்டில் டீசருக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட் சுமார் ரூ. 1200 கோடி முதல் ரூ. 1500 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய செலவினத்தில், முக்கியக் கலைஞர்கள் பெறும் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.
கதாநாயகனாக நடிக்கும் மகேஷ் பாபு, சுமார் ரூ. 100 கோடி சம்பளமாகப் பெறுகிறார். இயக்குநரான ராஜமௌலி சம்பளத்திற்குப் பதிலாக, படத்தின் மொத்த லாபத்தில் பங்கு பெறுகிறார். இது பல நூறு கோடிகளைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்கா சோப்ரா: குளோபல் ஸ்டாரான பிரியங்கா சோப்ரா, வில்லனை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்திற்காக ரூ. 30 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
