தமிழ் சினிமாவுல இப்படி ஒரு நடிகரா?.. ராஜமௌலியை ஆச்சரியப்படுத்திய சமுத்திரக்கனி.. அப்படி என்ன செய்தார்..?

By Nanthini on ஐப்பசி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சமுத்திரக்கனி. 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த சமுத்திரக்கனி திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றியை ருசித்தவர். திரைத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றிகனியை ருசித்தவர். இயக்குனர் கே பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இயக்கத்தில் வெளியான முதல் படத்திற்கு சிறந்த கதைக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது.

   

இதனைத் தொடர்ந்து அரசி மற்றும் இதோ பூபாலன் போன்ற சீரியல்களை இயக்கியது மட்டுமல்லாமல் ஜன்னல் மற்றும் மர்ம தேசம் போன்ற சீரியல்களிலும் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான அப்பா மற்றும் சாட்டை போன்ற திரைப்படங்கள் நடிகர் என்பதை தாண்டி இவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றன. குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த விசாரணை திரைப்படத்திற்காக சமுத்திரக்கனிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு பாராட்டுக்களும் விருதுகளும் கிடைத்திருந்தாலும் எப்போதும் மிகவும் எளிமையாகவே அனைவரிடத்திலும் பழகும் குணம் கொண்டவர். இவர் 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதை ஆசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமானார்.

   

 

 

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்தத் திரைப்படத்திற்காக சமுத்திரகனியை ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்புக்கு வரச் சொல்லி உள்ளனர். அதற்காக விமான டிக்கெட் மற்றும் ரூம் போடுவதற்காக சமுத்திரக்கனியை தயாரிப்பு நிறுவனம் சார்பாக அழைத்துள்ளனர். அப்போது தான் ஏற்கனவே விமான டிக்கெட் மற்றும் அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை சொந்த செலவில் செய்து விட்டதாக கூறியுள்ளார்.

பிறகு படத்தில் நடிப்பதற்கான சம்பளம் குறித்து சமுத்திரக்கனி இடம் ராஜமவுலி பேசும்போது தனக்கு எந்த சம்பளமும் வேண்டாம் உங்கள் படத்தில் நடிப்பதே பாக்கியம் என்று சமுத்திரக்கனி கூறியுள்ளார். பிறகு அவருக்கு ரூ.2 சம்பளம் என்று கூறியுள்ளனர். 2 என்றால் இரண்டு லட்சமாக இருக்கலாம் என்று சமுத்திரக்கனி நினைத்துள்ளார். படப்பிடிப்பு இறுதியில் சமுத்திரக்கனிக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்க கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பளத்தை தவறாக எழுதி விட்டதாக கூறி மீண்டும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். பிறகு ராஜமவுலி உங்க சம்பளமே இரண்டு கோடி தான் என்று கூறியுள்ளார். சமுத்திரகனியின் இந்த பண்பை அறிந்த தெலுங்கு திரை உலகம் அவருக்கு பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகின்றது.