பிரபல நடிகையான தேவயானி முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2003-ஆம் ஆண்டு ராஜகுமாரன் இயக்கத்தில் உருவான காதலுடன் என்ற திரைப்படத்தில் தேவயானி நடித்தார்.

இந்த படத்தை தேவயானி தயாரித்தார். முரளி, அப்பாஸ், ரமேஷ் கண்ணா, ராதாரவி, வினு சக்கரவர்த்தி, சத்யபிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர் இந்த திரைப்படத்திற்கு எஸ்.ஏ ராஜ்குமார் இசை அமைத்தார். இந்த நிலையில் ராஜகுமாரன் நடித்த பேட்டியில் கூறியதாவது, மொத்த இண்டஸ்ட்ரியும் காதலுடன் திரைப்படத்தை வெளியிடாமல் இருக்க உதவியா இருந்தாங்க.

அதை மறுக்கவே முடியாது காதலுடன் திரைப்படம் பிப்ரவரி 7-ஆம் தேதி ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் சரத்குமார் சார் லெட்டர் எழுதி அந்தப் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதிக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு. அவரு அப்போ நடிகர் சங்க தலைவர். அதனால அந்த படம் ரிலீஸ் பண்ண முடியல. எல்லாரும் முரளிக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. தேவயானிக்கு எதிரா இருந்தாங்க. அதுதான் உண்மை.

இன்னைக்கு பொறுத்த வரைக்கும் நாம இன்னும் அதே இண்டஸ்ட்ரில நல்லா தான் வேலை செஞ்சிட்டு இருக்கோம். ராஜ குமாரன் இருக்காரு. தேவயானியும் இருக்காங்க. எது இருந்தாலும் நான் உங்களுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறேன். சரத்குமார் சார் நான் ஏன் விட்டுக் கொடுக்க மாட்டேன்னா அவரு நம்மளோட ஹீரோ. அந்த நேரத்துல அவர் அப்படி செஞ்சிட்டாரு. அவ்வளவுதான் என பேசி உள்ளார்.

