இயக்குனர் ராஜகுமாரனுக்கு வந்த விபரீத ஆசை… இதற்கு நட்சத்திர நடிகர் மகன் ஒத்துக்குவாரா?

By Elango on மார்கழி 13, 2025

Spread the love

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, நான் இயக்கிய நீ வருவாய் என படத்தில் பார்த்திபன் தேவயானி இருவரும் நடித்திருந்தனர். இதில் முக்கிய கேரக்டரில் நடிகர் அஜீத்குமாரும் நடித்திருந்தார். ஆனால் இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் தான். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போய்விட்டது.

ஆனாலும் அஜீத்குமார் அந்த கேரக்டரில் நடித்து படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது நான் நீ வருவாய் என படத்தின் 2ம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இதில் என்னுடைய மகளை கதாநாயகியாகவும் நடிகர் விஜய் மகன் சஞ்சய்யை ஹீரோவாகும் நடிக்க வைக்க விரும்புகிறேன் என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

இப்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சூழலில் 4 படங்களை இயக்கி அதில் ஒரே ஒரு ஹிட் படம் தந்த ராஜகுமாரன் படத்தில் நடிக்க ஜேசன் சஞ்சய் சம்மதிப்பாரா? அதுவும் அவரது மகளே ஹீரோயின் என்றால் ஒத்துக்கொள்வாரா? ராஜகுமாரனுக்கு ஏன் இந்த விபரீத ஆசை? என்று இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் கேலி செய்கின்றனர்.