முதல்ல விஜய் அதை கத்துக்கணும்… ஏன் கத்துக்கிட்டா அவர் என்ன கொறைஞ்சு போயிடுவாரா? – விளாசித் தள்ளிய இயக்குனர் ராஜகுமாரன்!

By Elango on தை 1, 2026

Spread the love

இயக்குனர் மற்றும் நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் அவ்வப்போது நடிகர் விஜய் குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, தமிழ்நாடு ஒரு ஆபத்தான நாடு. நீங்க கொஞ்சம் அசந்தால் போதும் கர்நாடகா, கேரளாவில் இருந்து தண்ணீர் தரமாட்டேன்னு சொல்லுவாங்க. கேட்டா அடிப்பாங்க. ஆந்திராவில் இருந்து துறைமுகம் வரைக்கும் வந்து சாத்து சாத்துன்னு சாத்துவாங்க. ஒண்ணுமே பண்ண முடியாது.

சரி பேசாமல் இந்த பக்கம் போலாம்ன்னு என்று பார்த்தால் 30 கிலோமீட்டர் உள்ளே வந்துட்டாங்கன்னு கடலுக்குள்ளே இலங்கைகாரங்க வந்து மீனவர்களை பிடிப்பாங்க. நாலு புறமும் இப்படி ஆபத்தில் இருக்கிற மாநிலம் தான் இது. மற்ற மாநிலத்துக்கு இப்படியான ஆபத்து எதுவும் கிடையாது.

   

அதனால் எவ்வளவு உடன்படிக்கைகளோடு கட்டமைப்போடு ஒரு முதல்வர் சட்டசபையில் செயல்படும்ன்னு தெரிஞ்சுக்கணும். அப்பப்போ சிறுசிறு கூட்டணி கட்சி தாக்குதல் இருக்கும். இதையெல்லாம் சமாளிச்சு ஒரு அரசு அஞ்சு வருஷம் ஆட்சி நடத்துறாங்கன்னா அது சாதாரண விஷயம் கிடையாது. எல்லாமே அனுபவம்தான். ஒவ்வொண்ணா கத்துக்கிட்ட அரசியல் பாடம்தான்.

   

விஜய் ஒரு பத்து வருஷம் அரசியலை கத்துகிட்டு வந்தா என்ன குறைஞ்சிடும்? அதிமுக திமுக ஏதோ ஒரு கட்சியில் கூட்டணி சேர்ந்து அரசியலை கத்துகிட்டு வாங்க அப்புறமா ஆட்சி நடத்துங்க என்று நடிகர் விஜய் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.