சின்னத்திரையில் கலக்கும் ‘ராஜா ராணி2’ சீரியல் நடிகர் சித்து வெள்ளித்திரையிலும் நடித்துள்ளாரா.. அதுவும் இத்தனை திரைப்படங்களா..

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘ராஜா ராணி 2’. இந்த சீரியல் ஹிந்தி சீரியல் ஒன்றின் ரீ மேக்காக தற்பொழுது தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சித்து. இந்த தொடரில் தனது மனைவியின் இலட்சியத்தை நிறைவேற்ற துடிக்கும் ஒரு கணவனாக,

   

அதே சமயம் ஒரு அண்ணனாக, அம்மாவின் பேச்சை கேட்டு நடக்கும் ஒரு மகனாக இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகர் சித்து. இவர் இதற்கு முன்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்று சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார்.

அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் இத்திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தற்பொழுது ராஜா ராணி சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் நடிகர் சித்துவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

சின்னத்திரையில் பிரபலமான சித்து வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் .இவர் வெள்ளித் திரையில் குற்றம் கடிதல், பீச்சாங்கை, அகோரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சித்து  ‘வல்லினம்’ திரைப்படத்தில் நடித்த காட்சியின் புகைப்படம் ஒன்று மட்டும் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்…