பிரபல சரிப்பாளரான டி சிவா அம்மா கிரியேஷன் சென்று தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் சொல்வதெல்லாம் உண்மை, பாட்டுக்கு ஒரு தலைவன், சாமி போட்ட முடிச்சு, சின்ன மாப்பிள்ளை, மாணிக்கம், சரோஜா, அரவான், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இதில் சிவா தயாரித்த படங்களில் ஒன்று மாணிக்கம். இந்த படம் கடந்த 1996 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் ராஜ்கிரண், வனிதா ஆகியோர் நடித்தனர். அன்றைய கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரையும் தாண்டி தமிழ் சினிமாவில் முதன்முதலாக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா? நடிகர் ராஜ்கிரண் தான் தமிழ் சினிமாவில் முதல் முதலாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளார்.
தனி ஆளாக சினிமா விநியோக கம்பெனியை ராஜ்கிரண்தொடங்கினார். இவரது என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் என அடுத்தடுத்த மூன்று படங்கள் மெகா ஹிட் ஆனது. மூன்று படங்களை அவரே தயாரித்தார். அதே சமயம் ரஜினிகாந்தும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அந்த காலத்தில் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கியது ரஜினிகாந்த்.
மாணிக்கம் படத்தில் நடிப்பதற்காக ரஜினியை விட அதிகமாக 1 கோடியே 10 லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என ராஜ்கிரண் திட்டவட்டமாக கூறினாராம். இது குறித்து தயாரிப்பாளர் சிவா கூறியதாவது, ராஜ்கிரணிடம் மாணிக்கம் படத்திற்காக சென்று நடிக்க கேட்டேன். அப்போது அவர் வேறு ஒருவர் தயாரிக்கும் படத்தில் நான் நடித்ததே இல்லை. ரஜினியை விட அதிக சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என கூறினார். அதற்கும் நான் சரி என கூறினேன். இதனால் பல நடிகர்களுக்கு என் மீது கோபம். என்னை விமர்சித்தனர் என சிவா கூறியுள்ளார்.