“மாடு வளர்த்தால் மாதாந்திர ஊதியம்”… 2026 தேர்தலில் சீமான் வீசிய மிகப்பெரிய ‘சரவெடி’ வாக்குறுதி… விவசாயி இனி அரசு ஊழியர்?..!!!

Spread the love

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பாக, ஆடு மற்றும் மாடு வளர்ப்பை அரசுப் பணியாக மாற்றுவோம் என்ற வாக்குறுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தை வெறும் தொழிலாகப் பார்க்காமல், அவர்களுக்கு அரசுப் பணியாளர் அந்தஸ்து வழங்கி, மாதாந்திர ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரம் மேம்படுவதோடு, இளைஞர்கள் விவசாயம் மற்றும் கால்நடைத் துறையை நோக்கித் திரும்புவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தின் நிர்வாகச் செயல்பாடுகளைப் பரவலாக்கும் நோக்கில் ஐந்து தலைநகரங்கள் என்ற புதிய திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். அதன்படி சென்னை முதன்மைத் தலைநகராகவும், திருச்சி நிர்வாகத் தலைநகராகவும், கோவை தொழில் தலைநகராகவும், மதுரை கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி சுற்றுலாத் தலைநகராகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவற்றுடன் கல்வி மற்றும் மருத்துவத் துறைகளை முழுமையாக அரசுடைமையாக்குதல், மணல் கொள்ளையைத் தடுத்து இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற புரட்சிகரமான மாற்றங்களைச் செய்யப்போவதாக சீமான் தனது வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

Rajeshwari

Recent Posts

அடங்காத ஆத்திரம்… தீராத ரத்தவெறி.. துப்பாக்கியுடன் தேடிச்சென்று… மனைவியின் உயிரைப் பறித்துவிட்டுத் தானும் பிணமான கணவன்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய…

15 minutes ago

“தெருவில் காட்டிய வித்தை” ஒரே ஒரு வீடியோ… சிறுவனின் வாழ்க்கையை மாற்றப் போகும் ஆனந்த் மகிந்திராவின் ஒற்றை ட்வீட்..!!

உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…

26 minutes ago

“அந்தமான் கடலுக்கு அடியில் கிடைத்த ‘புதையல்’!.. இந்தியாவுக்கு அடித்த பிரம்மாண்ட அதிர்ஷ்டம்.. அலறும் உலக நாடுகள்.. வெளியான மாஸ் வீடியோ”..!!

இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…

41 minutes ago

FLASH: திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பதவியில் இருந்து விலகல்.. உதயநிதிக்கு பலத்த அடி..!!

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…

53 minutes ago

“சுற்றி இருக்கும் 10 பேர் கொண்ட கும்பல் உருவாக்கிய மாயை” – திமுகவை அதிரடியாக வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர்…!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…

60 minutes ago