ஆகஸ்ட் 21 வரை மழை நீடிக்கும்… தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை வெளுக்கப்போகுது?.. காலையிலேயே வந்த அலர்ட்…!

By Nanthini on ஆவணி 16, 2025

Spread the love

தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர பிரதேசம் அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது உள்நோக்கி நகர்ந்து மத்திய இந்தியாவில் மலைப்பொழியும். இதன் காரணமாக தென்னிந்தியாவில் மழையின் தீவிரம் குறையக்கூடும். ஆனால் இந்த அமைப்பின் ஓரங்களில் உள்ள சில மேகங்கள் தெற்கு ஆந்திர பிரதேசம் மற்றும் வடக்கு தமிழ்நாடு வழியாக நகரக்கூடும். இதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதனைத் தவிர தமிழ்நாட்டின் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் லேசான மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.