உஷார்..! தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு… வார்னிங் கொடுத்த பிரதீப் ஜான்..!!

By Soundarya on ஐப்பசி 14, 2025

Spread the love

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று  தொடங்கும் மழை நாளை முதல் நான்கு நாட்களுக்கும் தீவிரமாகும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கூறுகையில், “சென்னையில் இன்று 3 செ.மீ வரை மழைப்பொழிவு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கடற்கரை பகுதிகளில் இன்று முதல் மழை தீவிரமாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். புயலாக மாற வாய்ப்பு இல்லையென்றாலும் தொடர் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் கூறினார்.