இந்தியாவில் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் முறையில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனிடையே தற்போது ரயில் பயணத்திற்கான தட்கல் டிக்கெட் முன்பதிவில் OTP முறை கட்டாயம் என்ற இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதிகப்படியான மக்கள் முதல் தேர்வாக இருப்பதால் ரயில் டிக்கெட்டை நினைத்த நேரத்தில் எல்லாம் எடுத்து விட முடியாது. இதற்காகத்தான் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்குகின்றது.
அப்படியும் டிக்கெட் கிடைக்காதவர்கள் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பயணத்திற்கு ஒரு நாள் முன்பாக இந்த தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ள முடியும். கட்டணம் சிறிது அதிகம் என்றாலும் பெரும்பாலானோர் இந்த முறையில் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். தற்போது இந்த தட்கல் முறையில் தான் சிறிய மாற்றத்தை ரயில்வே கொண்டு வந்துள்ளது. இதுவரை தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது பெயர், வயது மற்றும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தாலே டிக்கெட் கிடைத்து விடும்.
ஆனால் தற்போது ஓடிபி உள்ளீடு செய்தால் மட்டுமே டிக்கெட் பெற முடியும். ஐ ஆர் சி டி சி இணையத்தளம் மற்றும் மொபைல் செயலி மூலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு டிசம்பர் 1ஆம் தேதி முதலில் இந்த ஓடிபி முறை அமலாகிவிட்டது. தற்போது ரயில்வே டிக்கெட் புக்கிங் கவுனர்களிலும் இந்த ஓடிபி முறை அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…