ஈரோடு-ஜோக்பானி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 16601) ரயிலில் இருந்து எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பயணிகள் பெட்டிக்குள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்த உணவுப் பாத்திரங்களை ஒருவர் கழுவுவது போன்ற காட்சிகள், இந்திய ரயில்களின் சுகாதாரத் தரநிலைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.
करोड़ो का घोटाला, रेल्वे अधिकारी अपनी मिलीभगत से लोगों को मैला, गंदा, कीड़े लगा डिस्पोजल पानी से धो खाना परोस रहा है, कोई व्रत रखा होगा, कोई बीमार होगा, उसे इसी डिस्पोजल में परोसा जा रहा है
ट्रेन 16601@AshwiniVaishnaw @PMOIndia @aajtak @narendramodi @IRCTCofficial @RailMinIndia pic.twitter.com/21fKSxD3Kc— शुकुल पंकज (@shukul_123) October 18, 2025
இந்த சம்பவம் ரயிலின் சமீபத்திய பயணங்களில் ஒன்றின் போது நடந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பயணி பதிவு செய்த வீடியோவில், ரயில்வே கேண்டீன் ஊழியர்களுடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர், பயணிகளுக்கான வாஷ்பேசனில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் உணவுத் தட்டுகளை சுத்தம் செய்வதைக் காட்டுகிறது. அவர் கொள்கலன்களை தண்ணீரில் கழுவி, அவற்றை ஒரு குவியலாக அழகாக அடுக்கி, மறுபயன்பாட்டிற்கு தயார் செய்கிறார். வீடியோவைப் பதிவுசெய்த பயணியை எதிர்கொண்டபோது, அந்த நபர் பதட்டமாகவும், தனது செயல்களை விளக்கும்போது தடுமாறியும் காணப்பட்டார். ஆரம்பத்தில் கொள்கலன்கள் ‘திருப்பி அனுப்பப்படுவதற்காக’ சுத்தம் செய்யப்படுவதாகக் கூறினார். இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
