WWE வீரர்கள் ரேஞ்சுக்கு சண்டை போட்ட IRCTC ஊழியர்கள்… ரயில் நிலையத்தில் நடந்த பயங்கர மோதல்… வெளியான ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் IRCTC ஊழியர்களும் அதிகாரிகளும் கடுமையாக மோதிக்கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஆர்சிடிசி ஊழியர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது திடீரென வாக்குவாதம் கைகளப்பாக மாறியது. உடனே அவர்கள் குப்பை தொட்டிகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமல்லாமல் பெல்ட்டை கழற்றி அடித்தனர். இதனைக் கண்ட பயணங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தை பார்க்கும்போது இவர்கள் ஐ ஆர் சி டி சி ஊழியர்களா அல்லது WWE வீரர்களா என்று தலையில் அடித்துக் கொண்டு தப்பித்தும் பயணிகள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.