லக்னோ சார் பாக் இரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை வந்தே பாரத் இரயில் ஊழியர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டி எண் 22490-ன் கேன்டீன் ஊழியர்கள், அந்த மாற்றுத்திறனாளியை இரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ஊழியர்களின் இந்த மனிதாபிமானமற்ற செயல் பொதுமக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.
🚨Heartbreaking: Divyang Man Pushed by Vande Bharat Staff at Charbagh Station
Deeply disturbing video from Charbagh (Lucknow) showing a Divyang passenger allegedly pushed by canteen staff of Vande Bharat -Train No. 22490
The video shows blatant “Rangdari” (bullying), yet no… pic.twitter.com/mEPmUvSa4W
— Ramesh Tiwari (@rameshofficial0) April 7, 2026
இந்தத் துயரமான சம்பவத்தின் போது அங்கிருந்த பயணிகள் யாரும் அந்த நபருக்கு ஆதரவாக முன்வராதது சமூகத்தின் அக்கறையின்மையைக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த ரவுடித்தனமான போக்கை வன்மையாகக் கண்டிப்பதோடு, சம்பந்தப்பட்ட இரயில்வே ஊழியர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டிய பொது இடத்தில், ஒரு மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த இந்த அவமரியாதை மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.
