“தம்பி நான் சொல்றத கேளுப்பா”… விஜய்க்கு ராகுல் கொடுக்கும் பிரஷர்… காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க அழுத்தம்… இப்படி ஒரு காரணம் இருக்கா..?

By Nanthini on ஐப்பசி 7, 2025

Spread the love

தமிழக அரசியலில் தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றி கடகம் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விஜய்க்கு கட்சியை கலைத்து காங்கிரஸ் உடன் இணைந்து செயல்பட வேண்டும் என கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூரில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக்கலகம் கட்சியினர் மீது நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்தது. அதிலும் குறிப்பாக கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது விசாரணை நடத்துவதற்கும் அவரின் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் அதே வழக்கில் நடிகர் விஜயின் மீது நேரடி நடவடிக்கை எடுக்காதது தொடர்பாகவும் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழக வெற்றிக்கலகம் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் தலைமுறைவாக இருந்து வரும் நிலையில் அவருக்கு இதுவரை ஜாமின் கிடைக்காத போதிலும் போலீசார் கைது செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்படியான நேரத்தில் விஜய் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசு எடுக்காமல் இருப்பது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

   

விஜய் தன்னுடைய பெயர் எஃப் ஐ ஆர் இல் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இடம் தலையீடு செய்யுமாறு கோரிக்கை வைத்ததாகவும்,திமுக தரப்பு சட்டப்படி நடந்து கொள்வோம் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவோம் என்ற நிலையில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி விஜய்யை தனது கூட்டணிக்குள் கொண்டுவர விரும்புகிறார் என கூறப்படுகிறது. விஜய் காங்கிரசுடன் ஒன்று சேர்ந்தால் அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 30 முதல் 40 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்பது மட்டுமல்லாமல் கமல்ஹாசனையும் காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் ராகுல் காந்தி நம்புகிறாராம்.

   

பாஜகவுடன் இணைந்தால் விஜயின் ஆதரவு வாக்குகள் குறிப்பாக கிறிஸ்துவ, இஸ்லாமிய, தலித் சமூக வாக்குகள் அப்படியே சிதைந்து போகும், இதனால் அவருடைய அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதையும் ராகுல் காந்தியை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே விஜயின் அடுத்த கட்ட அரசியல் தீர்மானம் தமிழக அரசியலின் வலுவான கூட்டணி சமீபத்தில் எவ்வாறு மாறும் என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.