BREAKING: ஜனநாயகன் படத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு… செம வைரலாகும் பதிவு…!!

By Soundarya on தை 13, 2026

Spread the love
1952-ல் சமூக மாற்றத்தைப் பேசிய ‘பராசக்தி’ திரைப்படத்தை திமுகவினர் கொண்டாடுவது போல, தற்போதைய சூழலில் இந்தப் படத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்னிறுத்துகின்றன. குறிப்பாக, இப்படத்தின் கருப்பொருள் மற்றும் வெளியீட்டில் எழுந்துள்ள சிக்கல்களைத் தொடர்ந்து, “ஜனநாயகன் படத்தை முடக்க நினைப்பது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்; தமிழ் மக்களின் குரலை ஒருபோதும் அடக்க முடியாது மிஸ்டர் மோடி” என ராகுல் காந்தி தனது ஆதரவைப் பதிவு செய்துள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த நிலைப்பாட்டைத் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் சமூக வலைதளங்களில் மறுபதிவு செய்து வைரலாக்கி வருகின்றனர்