“15 ஆண்டு டிராமா முடிஞ்சது…. மோடியின் ‘கேம் ஓவர்’ ஆரம்பம்”…. விஜய்யுடன் ரகசிய சந்திப்புக்குப் பின் கொந்தளித்த ராகுல் காந்தி….!

Spread the love

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, அவருடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் ஒரே காரில் பாலவாக்கம் கஃபேவுக்குச் சென்று பின்னர் தீவுத்திடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டனர்.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ‘மாணவர்களின் குரல்’ மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, தமிழக மாணவர்களின் கேள்விகேட்கும் திறனையும் ஞானத்தையும் வெகுவாகப் பாராட்டினார். தமிழ் கலாசாரம், வரலாறு மற்றும் கல்வி உரிமைகள் மீது மத்திய அரசு தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். புதிய கல்விக் கொள்கை வாயிலாக இந்த மொழியைத் திணிக்க முயல்வதாகவும், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் ஆளுநர் மூலமாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களைக் திணிக்க ஆர்வம் காட்டுவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

ஜனநாயகக் குரல்களை அடக்க பாஜக அரசு முற்படுவதாகத் தெரிவித்த ராகுல் காந்தி, டெல்லியில் மாணவர்கள் மீது குண்டர்களைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்களையும் சுட்டிக்காட்டினார். “15 ஆண்டுகளாக நடந்துவரும் டிராமா முடிந்துவிட்டது; நரேந்திர மோடியின் கேம் ஓவர் என்பது அவருக்கு இன்னும் புரியவில்லை” என்று தனது உரையில் மிகக் கடுமையான வார்த்தைகளால் மத்திய அரசைச் சாடினார்.

ராகுல் காந்தியின் இந்த அதிரடிப் பயணமும், அரசியல் தலைவர்களுடனான சந்திப்பும், மாணவர் மாநாட்டிலும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியலில் தற்போது பேசுபொருளாகியுள்ளன. கல்வி உரிமைகள் மற்றும் மாநில உரிமைகளை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளுக்கு இந்த நிகழ்வு மேலும் வலு சேர்த்துள்ளது.

Nanthini

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

2 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

3 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

3 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

3 மணத்தியாலங்கள் ago