“தவெக 25+ காங்.,12= விஜய் CM” அருமையான வாய்ப்பை கெடுத்துட்டீங்க… செல்வப்பெருந்தகைக்கு ராகுல் காந்தி விட்ட டோஸ்..? பரபரக்கும் அரசியல் களம்..!!

By Soundarya on சித்திரை 30, 2026

Spread the love

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தி.மு.க.வுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இருப்பினும், ராகுல் காந்தி, பிரவீன் சக்கரவர்த்தி, கிரீஷ் சோடங்கர் மற்றும் வேணுகோபால் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பலரும் தவெகாவுடன் கூட்டணி வைக்க விருப்பம் கொண்டிருந்தனர். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் கூட்டணி முறியும் நிலைக்குச் சென்றதால் ராகுல் காந்தி கடும் கோபமடைந்தார்.

நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, செல்வப்பெருந்தகை கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் உதவியுடன் கூட்டணிப் பேச்சைச் சுமூகமாக முடித்தார். வேறு வழியின்றி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும், சாதகமான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதில் செல்வப்பெருந்தகை கோட்டை விட்டதாகக் கருதப்படுகிறது. இது ராகுல் காந்தியின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

   

இந்த அதிருப்தி காரணமாகவே, தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய ராகுல் காந்தி முதலில் மறுத்துவிட்டார். நீண்ட வலியுறுத்தல்களுக்குப் பிறகு தமிழகம் வந்த அவர், காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் வெறும் 6 இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்தார். மேலும், எந்தவொரு பிரசாரக் கூட்டத்திலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்காமல் ராகுல் காந்தி தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

இந்நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க.வுக்கு 25 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்ற தகவலின் அடிப்படையிலேயே அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க முயன்றதாக ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகையிடம் கோபமாகத் தெரிவித்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அப்படி கூட்டணி அமைந்திருந்தால், காங்கிரஸின் 12 சதவீத வாக்குகளுடன் இணைந்து தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கலாம் என்றும், அந்த அருமையான வாய்ப்பைச் செல்வப்பெருந்தகை கெடுத்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளதாக கூறுகின்றனர்.

 

தற்போது தி.மு.க. கூட்டணியில் இருப்பதால், ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் கூட மீண்டும் வெல்வது சந்தேகம் என்றும், ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை வெற்றி பெறுவதே கடினம் என்றும் தகவல்கள் வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகையத் தலைவர்களால் தான் மாநிலங்களில் காங்கிரஸ் வளர முடியவில்லை என்றும், தனது பேச்சை மொழிபெயர்க்கக் கூட நல்ல ஆளை ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் தமிழக காங்கிரஸ் இருப்பதாகவும் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்ததாக கூறுகின்றனர்.