Breaking: ராகுல் காந்தியை தடுத்த சோனியா – பிரியங்கா…. விஜய் சந்திப்பு ரத்தானதன் உண்மையான பின்னணி…. 2029-ல் காங்கிரஸுக்கு வரப்போகும் பெரும் ஆபத்து…!

By Nanthini on ஆனி 3, 2026

Spread the love

டெல்லியில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இடையேயான முக்கிய சந்திப்பு கடந்த வாரம் திடீரென ரத்து செய்யப்பட்ட சம்பவம், காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி சமன்பாடுகளை பொதுவெளியில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. திமுகவுடனான நீண்டகால, வலுவான கூட்டணியை முறித்துக்கொண்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்க்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் மேலிடத்தின் அதிரடி முடிவு, கட்சியின் மூத்த நிர்வாகிகளால் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது. நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, இந்த சந்திப்புக்கு ராகுல் காந்தியின் தாய் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததே இந்த ரத்துக்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.

   

10 ஜன்பாத் இல்லத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனையின்போது, தேசிய அளவில் காங்கிரஸின் தூணாக விளங்கும் திமுக போன்ற ஒரு பக்குவப்பட்ட கட்சியை, ஒரு மாநிலத்தின் தற்காலிக அரசியல் சூழலுக்காக எப்படி தியாகம் செய்யலாம் என்று பிரியங்கா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற நம்பகமான தலைவரை பகைத்துக்கொண்டு விஜய்யின் பின்னால் செல்வது காங்கிரஸின் எதிர்காலத்தையே பாதிக்கும் என அவர் வாதிட்டுள்ளார். இதே கருத்தை வலியுறுத்திய சோனியா காந்தியும், தமிழக தொண்டர்களின் அழுத்தத்திற்காக எடுக்கப்பட்ட இந்த அவசர முடிவு, வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதுடன், வடமாநில பிராந்தியக் கட்சிகளிடையே காங்கிரஸின் நம்பகத்தன்மையை சிதைத்துவிடும் என்று ராகுல் காந்தியை எச்சரித்துள்ளார்.

   

முதலமைச்சர் விஜய் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அதே வேளையில், ராகுல் காந்தியுடனான சந்திப்பு தவிர்க்கப்பட்டது தற்செயலானது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, கர்நாடக உள்கட்சி விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் போன்ற காரணங்களை முன்னிறுத்தி ராகுல் காந்தி இந்த சந்திப்பை சாதுரியமாக தவிர்த்துள்ளார். தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தாலும், விஜய்யுடன் உடனடியாக பொதுமேடைகளைப் பகிர்ந்துகொள்வது திமுகவை மேலும் உசுப்பேப்பி, அரசியல் ரீதியாக தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்கும் என்று காங்கிரஸ் மேலிடம் அஞ்சுவதையே இது காட்டுகிறது.

 

இந்த திடீர் திருப்பம் தமிழகத்தில் தவெக – காங்கிரஸ் கூட்டணியின் ஆரம்பக்கட்ட உறவிலேயே ஒரு சுணக்கத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் வரும் ஜூன் 11 அன்று மீண்டும் டெல்லி செல்ல உள்ள நிலையில், அதற்குள் பிரியங்காவும் சோனியாவும் ராகுல் காந்தியின் அரசியல் உத்தியை ஏற்றுக்கொண்டு சமாதானமடைவார்களா? அல்லது காங்கிரஸின் டெல்லி தலைமை மீண்டும் திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் இந்த உள்கட்சி மோதல்களும், தென்னிந்திய கூட்டணி உத்திகளும் தமிழக அரசியலில் எந்த மாதிரியான புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தப் போகிறது என்பதை அடுத்த சில நாட்களே தீர்மானிக்கும்.