“மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினாரா அமித் ஷா?… நாடாளுமன்றத்தில் வெடித்த ராகுல் காந்தி… கதறிய பாஜக…!

By Swetha on ஆடி 29, 2026

Spread the love

நீட் தேர்வு மற்றும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மீதான விவாதத்தின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசைக் கடுமையாகச் சாடிப் பேசினார். மாணவர் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் பெல்லட் குண்டு வீச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே நேரடி பொறுப்பு என்றும், அவருடைய உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை பாய்ந்தது என்றும் நேரடியாகக் குற்றஞ்சாட்டினார். இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கமிட்டதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஆதாரமின்றிப் பேசக் கூடாது என ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, நாட்டின் கல்வி அமைப்பை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முழுமையாகக் கைப்பற்றி வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். தர்மேந்திர பிரதான் பெயரளவிலேயே கல்வி அமைச்சராக இருக்கிறார் என்றும், கல்வி அமைச்சகத்தை உண்மையில் இயக்குவது ஆர்.எஸ்.எஸ் தான் என்றும் விமர்சித்தார். மாணவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய வரலாற்றையே படிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இங்கு உண்மையான எதிரி ஆர்.எஸ்.எஸ் தான் என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

   

முன்னதாக, தனது உரையின் தொடக்கத்தில் 18 வயது மாணவி ஒருவருடனான உரையாடலை ராகுல் காந்தி பகிர்ந்துகொண்டார். அப்போது அந்த மாணவி கூறியதாக ராகுல் குறிப்பிட்ட வார்த்தைக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு விளக்கமளித்த ராகுல் காந்தி, தான் அவையில் உள்ள யாரையும் குறிப்பிடவில்லை என்றும், மாணவி கூறியதையே மேற்கோள் காட்டியதாகவும் தெரிவித்தார். இருப்பினும், அவைக்குறிப்பில் இடம்பெறக்கூடாத அந்த வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.