பாலிவுட்டில் வில்லனாக நடித்து வரும் ராகுல் தேவ் விஜயகாந்தின் நரசிம்மா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இவர் இறுதியாக தமிழில் வேதாளம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் பல ஹிந்தி திரைப்படங்களிலும் வில்லன் மற்றும் துணை நடிகராக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் இவர் பிஸியாக நடித்து வருகின்றார். விஜயின் நரசிம்மா திரைப்படம் தொடங்கி அர்ஜுனின் பரசுராம், ஜெயம் ரவியின் மழை, லாரன்ஸ் நடித்த முனி, சூர்யாவின் ஆதவன், அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இவர் ரினா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்து விட்டார். இந்த தம்பதிகளுக்கு சித்தார்த் என்ற ஒரு மகன் உள்ளார். தன் முதல் மனைவி இறந்த பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த ராகுல் தேவ் கடந்த சில வருடங்களாக பிரபல இந்தி நடிகை முக்கா கோட்சேவுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். இவர் தமிழில் தனி ஒருவன் திரைப்படத்தில் அரவிந்த்சாமியின் காதலி சில்பாவாக நடித்திருந்தார்.
இந்தியில் பல திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ளார். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் இருவரும் அதை பற்றி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் 18 வருடங்கள். தற்போது ராகுல் தேவுடன் இருக்கும் புகைப்படங்களை முக்தா வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல இப்படி ஒரு காதலா என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.