அந்த சீன் எடுக்கும் போது ரகுவரன் நிதானத்துலயே இல்ல… வேற லெவலில் யோசித்து மாஸ் காட்டிய  KS ரவிக்குமார்!

By vinoth on வைகாசி 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பலவகையான கதாபாத்திரங்களில் நடித்துக் கலக்கியவர்  ரகுவரன். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் முதலாக சினிமாவில் அறிமுகமானார். அ

தனை தொடர்ந்து தமிழில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகிய ரகுவரன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொருந்தியது. இதனைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

   

90s ரசிகர்களுக்கு ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக மிகவும் பிரபலமானவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இவர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படி பிசியான நடிகராக இருந்த ரகுவரன் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். ரோகினியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர் தான்.

   

ரகுவரன் நடித்த திரைப்படங்களில் அவருக்குப் பரவலான கவனத்தைப் பெற்றுத்தந்த திரைப்படம் புரியாத புதிர். அந்த படத்தில் அவர் நடித்த “I Know” காட்சி இன்றளவும் ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது. அந்த காட்சி முழுவதும் அவர் ஒரே வார்த்தையை வெவ்வேறு ஏற்ற இறக்கங்களோடு பேசி உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருப்பார்.

 

ஆனால் முதலில் அந்த காட்சியை அப்படி படமாக்க நினைக்கவில்லையாம் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். அந்த காட்சிக்கு 3 பக்கத்துக்கு மேல் வசனம் இருந்ததாம், ஆனால் அப்போது ரகுவரன் நிதானத்தில் இல்லையாம். அப்போது அவருக்கு அளவுக்கு மிஞ்சிய குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் பழக்கம் இருந்துள்ளது. அதனால் அவரால் வசனங்களைப் பேச முடியாது என்பதால் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் வைத்து அந்தக் காட்சியை வித்தியாசமாக எடுத்தாராம் கே எஸ் ரவிக்குமார். மேலும் அந்த காட்சியில் அவரே வசனத்தைப் பேசி ரகுவரனுக்கு நடித்தும் காண்பித்தாராம்.