இந்தி திணிப்பு கருத்தை வலுவாக சொல்லியிருக்கிறதா…? கீர்த்தி சுரேஷ் நடிப்பில் “ரகு தாத்தா” படம் எப்படி இருக்கு…? முழு விமர்சனம் இதோ…

By admin on ஆவணி 15, 2024

Spread the love

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘ரகு தாத்தா’. இப்படத்தில் ரவிந்தர், எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சுமன் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஹிந்தி திணிப்புக்கு எதிராக இந்த படம் பேசும் என்று முந்தைய பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பட குழு அறிவித்திருந்தது. தற்போது இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை இனி காண்போம்.

படத்தின் கதை 1960களில் நடக்கும் சூழலை நமக்கு காட்டுகிறது. கீர்த்தி சுரேஷ் ஒரு அழகான ஊரான வள்ளுவன் பேட்டை என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். தமிழ் மொழி, பெரியார் சிந்தனை, பெண்ணிய கருத்துகளின் மீது அதீத பற்று கொண்டவராக நாயகியான கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். அந்த ஊரில் இந்தி சபா தொடங்க நினைக்கும் பண்டிதரின் சபாவை திறக்க விடாமல் போராட்டம் செய்கிறார் கீர்த்தி சுரேஷ்.

   

   

அந்த ஊரிலே ஒரு வங்கியில் வேலை பார்த்து வரும் கீர்த்தி சுரேஷிடம் வங்கியின் மேலாளர் ஹிந்தி பயின்றால் மட்டுமே பிரமோஷன் கிடைக்கும் என்று ஒரு நெருக்கடி ஏற்படுகிறது. அதை எதிர்த்தும் குரல் கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். படத்தில் நாயகனாக ரவீந்தர் ஒருதலையாக கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார். அவர் முற்போக்கு சிந்தனையாளராக தன்னை கீர்த்தி சுரேஷிடம் சித்தரித்ததால் தனது தாத்தாவின் விருப்பப்படி ரவீந்தரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கிறார். குடும்பத்தார் கீர்த்தி சுரேஷுக்கும் ரவீந்தருக்கும் நிச்சயம் செய்து வைக்கின்றனர்.

 

நிச்சயமான பின்னர் ரவிந்தர் மிகவும் மோசமானவர், பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பவர் என்று கீர்த்தி சுரேஷ்க்கு தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். பின்னர் கீர்த்தி சுரேஷ் நாயனை திருமணம் செய்கிறாரா? ஹிந்தி சபாவை திறந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.

கீர்த்தி சுரேஷ் பெண்ணியம் பேசும் துறுதுறுப்பான பெண்ணாக நடித்திருக்கிறார். கயல்விழியாக கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தோடு வாழ்ந்து அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகனாக ரவீந்தர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நிச்சயதார்த்த காட்சி படத்தின் கிளைமாக்ஸ் ஆன திருமண காட்சிகள் மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எம் எஸ் பாஸ்கரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் என்று சொல்லலாம்.

ஹிந்தி திணிப்பையும் ஆணாதிக்கத்தையும் மையமாக வைத்து கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சுமன் குமார். அந்த கருத்துக்களை முடிந்த அளவு சரி கட்ட முயற்சி செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஹிந்தி மொழியை நாங்கள் எதிர்க்கவில்லை இந்தி திணிப்பை தான் தவறு என்று சொல்கிறோம் என்று பட பிரமோஷன்களில் கீர்த்தி சுரேஷ் கூறியிருந்தார். அதன்படி இந்தி தனிப்பு பற்றிய கருத்தை வலுவாக என்னும் ஆழமாக படத்தில் கூறியிருக்கலாம் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.