தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்புகள் அரங்கேறி வரும் நிலையில், நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் எடுக்கவுள்ள முக்கிய முடிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப நாட்களாக திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இதுகுறித்து பல்வேறு ஊடகங்களும் அவரிடம் விளக்கம் கேட்ட நிலையில், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில், தற்போது “பென்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருப்பதாகவும், படப்பிடிப்பு ஜூன் 10-ஆம் தேதி நிறைவடையும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது தாயின் ஆசீர்வாதத்துடன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான முடிவை எடுக்கவுள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்பை ஜூன் 11-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அரசியல் தொடர்பானதா என்ற கேள்வி உடனடியாக எழுந்துள்ளது. ஏனெனில், அவர் தனது அரசியல் பயணம் குறித்த தகவல்களை திட்டவட்டமாக மறுக்காமல், குறிப்பிட்ட நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருப்பதால், அவர் அரசியலில் களமிறங்குவது உறுதி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நடிகர்களின் அரசியல் பயணம் புதிய விஷயமல்ல என்றாலும், சமீபத்தில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்து அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். விஜய்யின் இந்த அசாத்திய வெற்றி, புதிய தலைமுறை அரசியல் தலைவர்களுக்கு பெரும் ஊக்கமாக மாறியுள்ளது. அதேபோல், பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையும் கட்சியில் இருந்து விலகி, “வி தி லீடர்” (We The Leader) என்ற மக்கள் இயக்கத்தை தொடங்கி புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் பயணத்துக்கு இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள், ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் எனப் பல்வேறு சமூக சேவைகள் மூலம் மக்களிடம் தனித்துவமான இடத்தை பெற்றுள்ள ராகவா லாரன்ஸ், அரசியலுக்கு வந்தால் தனது சேவைப் பாதையை மேலும் விரிவுபடுத்துவார் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். எனினும், இதுவரை இருதரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், ஜூன் 11 காலை வெளியாகவுள்ள ராகவா லாரன்ஸின் அறிவிப்பே தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் இறுதி தெளிவை ஏற்படுத்தும்.
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…