அதிரடியாக உடல் தோற்றத்தை மாற்றிய ராகவா லாரன்ஸ்….. சந்திரமுகி 2 ரிலீஸ்… யாரும் டொனேஷன் கொடுக்க வேண்டாம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Begam

Published on:

சந்திரமுகி 2 படத்திற்காக தனது உடல் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றிய புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர், சமூக ஆர்வலர் என பன்முகங்களுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவருடைய நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

   

‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராகவா லாரன்ஸ்.  நடிகராக மட்டுமின்றி இவர் இயக்கிய திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவரது உதவும் குணம் பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு சமூக நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பல மாற்றத்திறனாளிகளுக்கு பல வகைகளில் உதவி வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் தன் வீட்டிலேயே பல மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் அனாதை குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதனால் ரசிகர்களுக்கு பிடித்த ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதுவும் முக்கியமாக முனி காஞ்சனா போன்ற பேய் படங்களின் மூலம் தான் அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தற்பொழுது இவர் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது. பி. வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா என பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் தான்  சந்திரமுகி. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துக் கொண்டு வருகிறார் .

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கி இருக்கிறது இப்படத்திற்காக வேண்டி தனது உடல் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளார் ராகவா லாரன்ஸ். முரட்டுத்தனமான உடல்வாகுடன் காணப்படும் புகைப்படத்தை ட்விட்டரில்  பதிவிட்ட அவர், ‘தன்னுடைய அறக்கட்டளைக்கு இனி யாரும் டொனேஷன் கொடுக்க வேண்டாம்’ என்கிற கோரிக்கையும் வைத்துள்ளார். திடீரென ராகவா லாரன்ஸ் ஏன் இவ்வாறு கூறினார்? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இதோ அந்த புகைப்படங்கள் …..