#image_title
சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது இருப்பதே கிடையாது. ஒரு சிலருக்கு மட்டுமே இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. அப்படிப்பட்ட நடிகர்களின் ஒருவர்தான் ராகவா லாரன்ஸ்.
தனது சினிமா பயணம் மூலமாக பிரபலமானாரோ இல்லையோ பலருக்கும் உதவி செய்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார். பல மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்து வந்த இவர் தற்போது சேவையை கடவுள் என்ற மாற்றம் அறக்கட்டளையை கடந்த மே ஒன்றாம் தேதி தொடங்கி அதன் மூலம் பலருக்கும் உதவி செய்துள்ளார்.
மேலும் இவர் வளர்த்து விட்ட பல இளைஞர்கள் இந்த மாற்றம் அறக்கட்டளையில் இணைந்து இணைந்து பிறருக்கு உதவி செய்து வருகிறார்கள். இது தொடர்பான நிகழ்ச்சி கூட சமீபத்தில் நடைபெற்றது. இதில் அறந்தாங்கி, நிஷா, கே பி ஒய் பாலா, எஸ் ஜே சூர்யா அனைவரும் இந்த அறக்கட்டளையின் இணைந்து பலருக்கும் உதவி செய்து வருகிறார்கள். இந்த மாற்றம் அறக்கட்டளையில் முதல் கட்டமாக டிராக்டர் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
அதற்கேற்றார் போல் பல இடங்களுக்கு சென்று ராகவா லாரன்ஸ் டிராக்டர்களை வழங்கி உதவி செய்து வந்தார். இதன் மூலமாக விவசாயத்திற்கு உதவும் வகையில் இலவசமாக இந்த டிராக்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து ஒரு உதவியை செய்து இருக்கிறார்கள்.
ஒரு கிராமத்தில் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு மாணவி பணம் இல்லாத காரணத்தினால் இந்தியாவிற்காக விளையாட முடியாமல் தவித்து வந்திருக்கின்றார். இதனை கேள்விப்பட்ட கேள்வி பட்ட பாலா ராகவா லாரன்ஸ் உடன் சென்று இதனை தெரிவிக்க உடனே அவர்களை அழைத்து உதவி செய்திருக்கின்றார் ராகவா லாரன்ஸ்.
நீங்கள் இந்தியாவுக்காக விளையாடினால் அது எங்கள் அனைவருக்குமே பெருமை என்று கூறி அவருக்கு பண உதவி செய்திருந்தார் ராகவா லாரன்ஸ். பின்னர் அந்த மாணவி இந்தியாவிற்காக போட்டிகளில் விளையாடி தங்கப்பதக்கம் வென்றிருக்கின்றார். அடுத்ததாக ஏசியன் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் வாழ்த்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…